இந்தியா இஞ்சியை அதிக அளவில் பயிரிடும் நாடு என்பதால் உலக நாடு களின் தேவையை தரத்திலும் அளவிலும் வழங்குவதற்கான திறன் எப்போதும் உண்டு. இந்தியா 2017-18 ஆண்டுகளில் 160 ஆயிரம் ஹெக்டேர் பரப்பில் சுமார் 1043 ஆயிரம் டன்இஞ்சியை உற்பத்தி செய்துள்ளது. இதனால் தெரிய வருவது இந்தியா கால மாறுதல்களை ஏற்று உலக நாடுகள் விரும்பும் தரமான மற்றும் பாதுகாப்பான பொருட்களை வழங்கும் திறன் கொண்டது என்பதாகும்.
புதையிடுதல் மற்றும் களை நிர்வாகம்
பாத்திகளை பசுமையான இலைகளைப் பயன் படுத்தி புதையிடுவது அவசியம். இதனால் மழை காலங்களில் மண் அரிப்பு தடுக்கப்படும். மேலும் முளைப்புத்திறன் அதிகரிக்கும். நல்ல காற்றோட்டம் கிடைக்கும், களைகள் வளராது. மண்வளம் கூடும். நடவு செய்யும் போது முதல் புதையிடுதலை ஒரு ஹெக்டேருக்கு 10 முதல் 12 டன் இலைகளைக் கொண்டு செய்ய வேண்டும். இந்த புதையிடுதலை 45 மற்றும் 90 நாட்களின் போது மீண்டும் செய்ய வேண்டும். அப்போது ஒரு ஹெக்டேருக்கு 7.5 டன் இலைகள் போதுமானதாகும். இவற்றை களை எடுத்தல், உரமிடுதல் மற்றும் மண்ணைக் கிளறிவிடுதல் ஆகிய செயல்பாடுகளைச் செய்த பின் புதையிட வேண்டும்.
களைகள் மூலமாக நோய் பரவுதல் என்பது இஞ்சி விவசாயத்தில் ஒரு பிரச்சனையாகும். இதனால் விளைச்சல் பாதிக்கப்படும். மஞ் சளில் களை எடுப்பது என்பது தொன்று தொட்டு செய்துவரும் முறையான கைக்களை எடுப்பதே பின்பற்றப்படுகிறது. களை எடுப்பதை உரமிடுதல் மற்றும் புதையிடுவதற்கு முன்பு செய்ய வேண்டும்.
முதல் களை எடுப்பை நடவு செய்த 45ஆவது நாளிலும், இரண்டாவது களையை 90 லிருந்து 120 நாட்களிலும் செய்ய வேண்டும். நடவு செய்ததைத் தொடர்ந்து ஒரு ஹெக்டேருக்கு ஆறு டன் வைக்கோலையும் 45 மற்றும் 90 நாட்களில் ஒரு ஹெக்டேருக்கு 7.5 டன் இலைகளையும் இடுவதால் களைகளின் வளர்ச்சியை கட்டுப்படுத்தலாம்.
தென்னை மரங்கள் உள்ள இடங்களில் ஒரு ஒரு ஹெக்டேருக்கு ஆறு டன் அளவில் தென்னை இலைகளை பரப்புவதாலும் களைகளின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்தலாம். நடவு செய்வதற்கு ஒரு மாதத்திற்கு முன்பு மண்ணை சூரிய வெப்பத்தில் பண்படுத்துதல் மூலமாக களைகளின் வளர்ச்சியை கட்டுப்படுத்தலாம். களை எடுக்கும் போதே மண்ணையும் கிளறி விடலாம்.
நீர்ப்பாசனம்
இஞ்சியை மழைகாலப் பயிராக அதிகமாக மழை பெய்யும் இடங்களிலும் , மழைக்குறைவான இடங்களில் பாசனப்ப யிராகவும் வளர்க்கலாம். நீர்ப்பாசனத்தின் அவசியம் என்பது விதைகள் முளைக்கத் தொடங்கும் நேரத்திலும், நட்ட 90 நாளில் கிழங்குகள் உருவாகும் சமயத்திலும் மற்றும் 135 நாளான கிழங்குளின் வளர்ச்சிப் பருவத்திலுமாகும். முதல் நீர்பாசனம் என்பது நடவு செய்த உடனேயும், அடுத்துள்ள பாசனம் என்பது ஏழு முதல் பத்து நாட்கள் இடைவெளியிலுமாகும். தண்ணீர் சிக்கனம் மற்றும் அதிகமான விளைச்சலுக்கு தூவல் பாசனம் அல்லது சொட்டு நீர்ப்பாசனம் சிறந்ததாகும்.
உரமிடுதல்
இயற்கை முறை இஞ்சி விவசாயத்தில் எவ்விதமான இரசாயனப் பொருட்களையும் பயன்படுத்தக் கூடாது என்பதே குறிக்கோளாகும். மக்கிய இயற்கைக் கழிவுகள் அனைத்தையும் உரமாக பயன்படுத்தலாம். மண்ணில் பொட்டாசியத்தின் குறைபாடு இருந்தால் சாம்பல் அல்லது சல்பேட் ஆஃப் பொட்டாஷை இரண்டு தவணைகளான 45 மற்றும் 90 ஆவது நாளில் இடலாம். வளர்ச்சி ஊக்கத்திற்கும் நோயைக் கட்டுப்படுத்தவும் PGPR STRAIN OF Bacillus amyloliquifa- ciensபயன்படுத்தலாம். இது மாத்திரை வடிவில் கிடைக்கும்.
ஒரு மாத்திரையை 200 லிட்டர் தண்ணீரில் கரைத்து பயன்படுத்தலாம். இதனை விதை நேர்த்தி செய்யவும், நடவைத் தொடர்ந்து 60 மற்றும் 90 ஆவது நாட்களில் பாத்திகளின் மீது நனைத்து விடலாம். மண் பரிசோதனையின் அடிப்படையில் பாஸ்பரஸ் மற்றும் பொட்டாசியம் ஆகியவற்றின் தேவைக்காக சுண்ணாம்பு, டோமலமைட் ராக் பாஸ்பேட் ஆகியவற்றைப் பயன்படுத்தலாம்.
மேலும் பரிந்துரைகளின் அடிப்படையில் நுண்ணூட்டக் கலவைகளை இலைவழித் தெளிப்பாகவும் கொடுக்கலாம். இதனை நடவு செய்த 60 மற்றும் 90 ஆவது நாளில் செய்யலாம். இவற்றை சம்பந்தப்பட்ட சான்று பெற்ற நிறுவனங்களின் பரிந்துரைகளின் பேரில் மட்டுமே செய்ய வேண்டும்.
நிழல் பராமரிப்பு
நிழல் இஞ்சியின் வளர்ச்சிக்கு பல விதங்களில் உதவியாக உள்ளது. நடுத்தர அளவிலான (25 சதவீதம்) நிழல் அமைப்பில் இஞ்சியை வளர்க்கும் போது அதிகப்படியான தண்ணீர் இழப்பைத் தடுக்கிறது . அதிகப்படியான நிழல் இருந்தால் அது கிழங்குகளின் எண்ணிக்கையை குறைத்து விடும். செடிகள் மண்ணிலிருந்து ஊட்டச்சத்துக்களை எடுத்துக் கொள்வது நிழல் பராமரிப்பில் முக்கியமான செயல் பாடாகும். மேலும் பைலோஸ்டிக்டா எனும் இலைப்புள்ளி நோயின் தாக்கம் குறையும்.
பயிர்ப் பாதுகாப்பு
இஞ்சியைத் தாக்கும் நோய்களுள் மிகவும் கொடுமையானது மெது அழுகல் ஆகும். இதனால் தூர்ப்பகுதி முழுவதும் பாழாகிவிடும். இதற்கு நல்ல வடிகால் நிலத்தை இஞ்சி பயிரிட தேர்வு செய்ய வேண்டும். தண்ணீர் அதிகமாக தேங்கி இருந்தால் இந்த நோய் கோன்ற எதுவாகிவிடும் கவின்கமன்பாக நிலத்தை சூரிய வெப்பத்தில் பண்படுத்துவதால் இது போன்ற நோய்க் கிருமிகளை அழித்து விடலாம்.
ஆரோக்கியமான, நோய் தாக்காத விதைக் கிமா கிழங்குகளை டிரைக்கோடர்மா போன்ற வற்றைப் பயன்படுத்தி விதை நேர்த்தி செய்திருக்க வேண்டும். மேலும் கிழங்குகளைப் பாதுகாக்க தரமான வேப்பம் பிண்ணாக்கைப் பயன்படுத்தி நிலத்தை தயார் செய்திருக்க வேண்டும்.
பாக்டீரியல் வாடல் மற்றும் இலைப்புள்ளி நோய்களைக் கட்டுப்படுத்த ஒரு சத போர்டோ மிக்சரைத் தெளிக்கலாம். வேர் முடிச்சு, பரோயிங், மற்றும் திட்டுகள் போன்றவை இஞ்சியில் வரும் நெமட்டோட் பூச்சிகளாகும். இதற்கும் விதைப்பதற்கு முன்பு முறையாக விதை நேர்த்தி செய்வதும், நோய் தாக்கிய விதைகளாக இருந்தால் அவற்றை 50 டிகிரி வெப்பமுள்ள சுடுநீரில் பத்து நிமிடங்களுக்கு வைத்த பின் நட வேண்டும்.
மேலும் நடுவதற்கு முன் நிலத்தை சூரிய வெப்பத்தில் பண்படுத்தியிருக்க வேண்டும். வேர்முடிச்சு அதிகம் இருக்கும் இடங்களில் ஐ.ஐ.எஸ். ஆரின் ரகமான மகிமாவைப் பயிரிட வேண்டும். இதற்கு நோய் எதிர்ப்புத் திறன் அதிகமாகும். மேலும் நிலத்தை தயார் செய்யும் சமயத்தில் தரமான வேப்பம் பிண்ணாக்கு மற்றும் பொக்கொனியா சால்மைடோஸ்போரியா ஒரு பாத்திக்கு 20 கிராம் வரை இட்டு நடவு செய்ய வேண்டும்.
நுண்ணுயிர் நோய் வாடல் நிர்வாகம் (Bacterial wilt) :
இதன் முதல் நிலை என்பது பயிரிடும் பகுதியை தேர்வு செய்வது மற்றும் மண் பரிசோதனை செய்து Ralstonia sola nacearumrace4 biovar3 உள்ளதா என்பதை அறிந்து கொள்வது.
பாத்திகளை சூரியவெப்ப பண்படுத்த லுக்காக 40 முதல் 50 நாட்களுக்கு வைப்பது. (மார்ச் 1 முதல் ஏப்ரல் 15 வரை)
விதைக் கிழங்குகளை Bacilluslicheni forms பயன்படுத்தி தயார்படுத்துதல். இதற்கு 200 கிலோ விதைக் கிழங்குகளை இரண்டு கிலோ டால்க் தயாரிப்புகளை 100 லிட்டர் தண்ணீ ரில் நடுவதற்கு முன்பு ஊறவைக்க வேண்டும்.
மண்வழிப் பிரயோகமாக Bacillus licheniformis (GAB107) என்பதை நடும்போதும் 30, 60, 90 நாட்கள் இடைவெளிகளில் பாத்தி ஒன்றிற்கு ஐந்து லிட்டர் வீதம் தெளிக்க வேண்டும்.
பூச்சிகள்
பூச்சிகள் இஞ்சியில் தண்டு துளைப்பான் என்பது அதிகமான பாதிப்பை உண்டாக்கும் பூச்சியாகும். இதனை கட்டுப்படுத்த நீம் கோல்டை (0.6 சதம்) 21 நாட்கள் இடைவெளியில் ஜூலை முதல் அக்டோபர் வரை மாதங்களில் தெளிக்க வேண்டும். மேலும் ஒருங்கிணைந்த பாதுகாப்பு முறையாக களை திருத்தம் மற்றும் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் நோய் தாக்கிய பகுதி களை அப்புறப்படுத்துவது முக்கியமாகும். ஒரு மாத இடைவெளியில் செப்டம்பர் முதல் அக்டோபர் வரை நீம் போல்டை தெளிக்க வேண்டும்.
கிழங்கு செதில் (Aspidiella hartii) என்ப து கிழங்குப் பகுதியைத் தாக்கும் பூச்சியாகும். இதனைத் தவிர்க்க விதை கிழங்குகளை வேம்பு தொடர்பான பூச்சி கொல்லிகளைப் பயன்படுத்தி பண்படுத்த வேண்டும்.
அறுவடை
இஞ்சியை நடவு செய்த 210 முதல் 240 நாட்களில் அறுவடைக்குத் தயாராகும். இஞ்சி அறுவடைக்குத் தயாராகி விட்டது என்பதை இலைகள் மஞ்சளாவது மற்றும் சிறுகச் சிறுக உலர்ந்து போவதை வைத்து அறிந்து கொள்ளலாம். அறுவடைக்கு ஒரு மாதத்திற்கு முன்பே நீர்ப்பாசனத்தை நிறுத்த வேண்டும். அறுவடையின் போது கிழங்குகள் சேதமடையாத வகையில் அதற்கென உள்ள ' கருவிகள் மூலமாக சேகரிக்க வேண்டும்.
' காய்கறிக்கான இஞ்சியை ஆறுமாதம் தொடங்கி அறுவடை செய்ய வேண்டும். கிழங்குகளை தண்ணீரில் சுத்தமாகக் கழுவி ஒரு நாள் வெயிலில் காயவைக்க வேண்டும். அதிகமான பரப்புள்ள நிலங்களில் டிராக்டர் மற்றும் பவர் டில்லர் மூலமாக அறுவடை செய்ய வேண்டும்.
- T.யுவராஜ் தட்சிணாமூர்த்தி , B.E.(Agri).