நல்ல வருமானம் தரும் வரவேற்பு வாழை!

வரவேற்பு வாழை வளர்த்து, அதில் பவளமான வருமானம் பார்த்து வருகிறார். கும்பகோணம் அருகே பட்டணம் கிராமத் தைச் சேர்ந்த ராமச்சந்திரன்.


'வரவேற்பு வாழை' என்று ஒன்று உண்டா என்ற ஆச்சரியப்படுகிறார்களா? இதோ அதைப் பற்றி அவரே சொல்கிறார்.


எம்.ஏ., படித்து விட்டு முழு மூச்சாக விவசாயத்தில் இறங்கினேன். மூன்று தலை முறையாக விவசாயந்தான் எங்கள் தொழில் காலங்காலமாக நெல் தான் பயிரிட்டு வந்தோம்.


அதில் எதிர்பார்த்த இலாபம் கிடைக்க வில்லை. முக்கியமாக செய்த செலவுக்குக் கூட விளைச்சல் கிடைக்கவில்லை. எந்தப் பொருளுக்கும் அதைத் தயாரித்தவர்தான் விலை வைக்க வேண்டும்.


ஆனால் நெல்லுக்கு அப்படியில்லை இடைத்தரகர்கள், மொத்த வியாபாரிகள் என பல தரப்பினர் விலை நிர்ணயம் செய்வர்.


அதனால் நாமே விலை நிர்ணயம் செய்வது போல ஏதாவது ஒன்றை சாகுபடி செய்ய வேண்டும் என யோசித்துக் கொண்டிருந்தேன்.


வேண்டும் என யோசித்துக் கொண்டிருந்தேன். அப்போது தான் நிலை வாழைகள் என அழைக்கப்படும் கல்யாண வீடுகள் மற்றும் விசேஷ நிகழ்ச்சிகளில் வரவேற்புக்காகக் கட்டப்படும் வாழை மரங்களைப் பயிரிட்டு லாபம் பார்க்கலாம் என்பதை அறிந்தேன்.


சாதாரணமாக எந்த வகை வாழையாக இருந்தாலும் ஒரு தார் 300 ரூபாய்க்கு மேல் விலை போகாது. ஒரு தார் உற்பத்தி செய்ய 11 மாதங்கள் காத்திருக்க வேண்டும்.


ஆனால் வரவேற்பு வாழையை எட்டு மாதங்கள் முதல் 10 மாதங்களுக்குள் அறுவடைசெய்யலாம். ஒரு ஜோடி மரம் 800லிருந்து1000 ரூபாய் வரை விலை போகும்.


வரவேற்பு வாழைக்கு பூவன் வாழைதான் சிறந்தது. இதற்கும் நான் இயற்கை உரங்களைத் தான் பயன்படுத்துகிறேன். மரம் நல்ல உயரமாக வளரும். அடி பெருத்து, பார்க்க நன்றாக இருக்கும். வரவேற்பு வாழைக்கு பூ நன்றாக இருக்கும். வரவேற்பு வாழைக்கு பூ நன்றாக விரிந்திருக்க வேண்டும்.


அதனால் பூவன் தான் சிறந்தது. ஒரு ஏக்கரில் 1000 வாழைகள் பயிரிடலாம். 800 வாழைகள் நல்ல தரமான வாழைகளாக வளர்ந்து விடும். வரவேற்பு வாழை தேவைப் படுவோர், எங்களிடம் முன் கூட்டியே சொல்லி வைத்து விடுவர்.


சொல்லி வைத்து விடுவர். நாங்களே அவர்கள் இடத்திற்கு வாழை மரங்களை எடுத்துச் சென்று பக்குவமாகக் கட்டி விடுவோம். மரங்கள் செங்குத்தாக வரை 6லிருந்து 7 மாதத்தில் கம்பு ஊன்றி, முட்டுக்கொடுக்க வேண்டும். ஏழாம் மாதம் முதல் தேவைக்கேற்ப வெட்டி விற்பனை செய்யலாம்.



ஒரு மரத்திற்கு குறைந்த பட்சம், 400 ரூபாய் விலை வைத்தாலும், 800 மரத்திற்கு 3.20 லட்சம் ரூபாய் கிடைக்கும். செலவு போக 2.5லட்சம் ரூபாய் கிடைக்கும்.


இது போக மீதமுள்ள 200 வாழை மரங்களில் அவற்றின் இலை, பக்கக் கன்றுகள், வாழைக்காய்களை வெட்டி இலாபம் பார்க்கலாம் என்கிறார் ராமச்சந்திரன். தொடர்புக்கு: 82828 24333.


முள் சீத்தாவில் நல்ல வருமானம்:


நல்ல வருமானம்: தெற்கு அமெரிக்காவைத் தாயகமாகக் கொண்டது முள் சீத்தா இம்மரம் ஈரப்பதம் மிகுந்த வெப்ப மண்டலங்களான தமிழ்நாடு, கேரளா மற்றும் கர்நாடகாவில் காணப் படுகிறது.


முள் சீத்தாப்பழம் 3லிருந்து10 மீட்டர் அளவு வளரக் கூடிய குட்டை மரம். இது கிராவியோலா என்றழைக்கப்படுகிறது. தனித்துவமான அமிலச்சுவை இப்பழத்திற்கு உண்டு .


பழத்தின் மேற்பரப்பில் உளள் முள்கள், பெருமளவில் பரவும் விசித்திரமான வாசனை, குறிப்பிட்ட வெப்ப மண்டல கால நிலைத் தேவைகள் சார்ந்து மற்றசீத்தாப்பழவகைகளில் இருந்து இது மாறுபடுகிறது.


                                                                   


மதிப்பு கூட்டல் தொழில் வாய்ப்பு, மருத் துவப் பயன்பாடுகள் சார்ந்து முள் சீத்தாப் பழத்தின் தேவை ஆண்டுக்காண்டு அதிகரித்து வருகிறது.


ஈரத்தன்மை மிகுந்த வெப்ப மண்டலப் பயிரான இது 900 மீட்டருக்கும் குறைவான உயர்த்தில் வளரக்கூடியது. 21 முதல் 31 டிகிரி செல்சியஸ் தட்பவெப்பநிலை இம்மரத்தின் வளர்ச்சிக்கு ஏற்றது.


மேலும் மிதமான நிழலைத் தாங்கி வளரும் தன்மை கொண்ட காரணத்தால் தென்னை, நோனி, துரியன், ஆகிய மரங்களுக்கிடையே ஊடு பயிராகவும் இதை வளர்க்கலாம்.


பல்வேறு மண் வகைகளில் வளரும் தன்மை கொண்ட இம்மரம். அதிகக் கரிமப்பொருள் மற்றும் குறைந்த உப்புச் சத்து கொண்ட மண்ணில் நன்கு வளரும்.


குறிப்பாக நீர்த்தேக்கம் உள்ள நிலப் பரப்புகளில் இம்மரத்தை சாகுபடி செய்வதை தவிர்க்க வேண்டும்.


ஜூன்-ஜூலை மாதங்களில் வடகிழக்கு பருவமழை ஆரம்பிக்கும் நேரத்தில் நடவு செய்ய வேண்டும். நடவு செய்யப்படும் செடிகள் 9லிருந்து 12 மாதங்கள் வயது கொண்டதாகவும் 60லிருந்து 100 செ.மீ உயரம் கொண்டதாகவும் இருக்க வேண்டும்.


தோட்டக்கலை அலுவலர்களின் ஆலோ சனை மற்றும் வழிகாட்டல்களின் மூலம் அனுபவ விவசாயிகளையும் சந்தித்து இச்சாகுபடியில் இறங்குவது பயன்மிக்கதாகும் இச்சாகுபடியில் கவாத்து செய்தல், தக்க ஊட்டச்சத்துகளைக் கொடுத்தல், உரிய காலத்தில் நீர் மேலாண்மை செய்தல் எல்லாவற்றையும் தக்க முறையில் செய்தல் வேண்டும்.


நடவு செய்த 3.5 ஆண்டுகளில் விளைச்சல் கிடைக்கும். காய்கள் பறிப்பில் கவனம் அதிகம் தேவை. ஆண்டு ஒன்றுக்க 1லிருந்து3 அறுவடை வரை செய்யலாம். ஒரு மரத் திலிருந்து 20லிருந்து24 பழங்கள் விளைச்சலாகக் கிடைக்கும்.


நன்கு பழுத்த பழங்களைக் கொண்டு சிட்ரிக் அமிலம் மற்றும் சர்க்கரை சேர்க்கப் பட்டு, பழக்கூழ்சாறு மற்றும் சிரப் போன்ற மதிப்பூட்டப்பட்ட பானங்கள் தயாரிக்கப் படுகிறது. பிலிப்பைன்ஸ் மற்றும் இந்தோனேசியா நாடுகளில் முதிர்ச்சியடையாத பழங்கள் காய்கறியாகவும் தயாரிக்கப்படுகிறது.


அண்மைக் காலத்தில் முள் சீத்தாவின் இலைகள் மிகுந்த பயன்பாடு. கொண்டுள்ளதாக ஆராய்ச்சிகள் கூறுகின்றன. குறிப்பாக இலைகளில் உள்ள அசிடோஜெனின் என்றழைக்கப்படும் வேதிப்பொருள், பல்வேறு புற்கு நோய்களைக் குணப்படுத்தும் தன்மை கொண்டதாக நிரூபிக்கப்பட்டிருக்கிறது.


சாகுபடியில் வணிக வாய்ப்பு தரும் முள் சீத்தா மரச்சாகுபடி பற்றிய கூடுதல் விவரங்கள் அறிய மருந்து மற்றும் மணமூட்டும் பயிர்கள் துறை, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்,


கோயம்புத்தூர்-641 003. அலைபேசி: 94863 91863.


நல்ல லாபம் தரும் நாட்டு எலுமிச்சை நாட்டு எலுமிச்சை


இயற்கை முறையில் எலுமிச்சை சாகுபடி செய்து வரும் திருநெல்வேலி மாவட்டம், கடையத்தைச் சேர்ந்த சண்முகவேலு தன் சாகுபடி அனுபவம் பற்றி விளக்குகிறார்.


எனக்கு சொந்த ஊர் ஆலங்குளம், விக்கிரம சிங்கபுரம் மதுரா கோட்ஸ்மில்லில் அப்பா வேலை பார்த்ததால் இந்த ஊருக்கு வந்து விட்டோம். நான் கல்லூரிப் படிப்பை முடித்து அதே மில்லில் வேலைக்கு சேர்ந்தேன். இந்தத் தோட்டத்தை நண்பரிடம் இருந்து வாங்கினேன்.


கடந்த 1996ல், விருப்ப ஓய்வு பெற்று விவசாயத்தை ஆரம்பித்தேன். ரசாயன பூச்சிக் கொல்லிகளை பயன்படுத்தி முதல்முறையாக நெல் விதைத்தேன். அடுத்து நிலையான வரு மானம் கிடைக்கும் வகையில் அரை ஏக்கரில், நாட்டு எலுமிச்சையை நடவு செய்தேன்.


இயற்கை விவசாயம் பற்றி மகன் கூற அது குறித்து அறிந்து 2.5 ஏக்கரில் அந்த முறையில் எலுமிச்சை சாகுபடியை ஆரம்பித்தேன். 10 ஆண்டுகளாக முழு இயற்கை முறையில் எலுமிச்சையில் நல்ல மகசூல் எடுத்து வருகிறேன். 2.5 ஏக்கரில் எலுமிச்சை போக, 2.5 ஏக்கரில் வீடு, மூலிகை மற்றும் பூச்செடிகள் உள்ளன.


மொத்தம் 300 எலுமிச்சை மரங்களில் 250 மரங்கள் காய்ப்பில் உள்ளன. சந்தையில் தேவை அதிகமாகி நல்ல விலை கிடைத்தால் மொத்த பழத்தையும் பறித்து விற்று விடுவேன். அதே போல் ஆடிக்காற்று தொடங்கும் முன்பும் பறித்து விடுவேன். சந்தையில் விலை குறைவாகக் கிடைக்கும் காலங்களில் கீழே விழுகிற காய், பழங்களை சேகரித்து விற்பனைக்கு அனுப்புவேன்.


பொதுவாக மார்ச் முதல் மே மாதம் வரை எலுமிச்சைக்கு நல்ல விலை கிடைக்கும். மழைகாலத்தில் விலை இருக்காது. விரத காலங்கள், கோவில் திருவிழாக்கள், முகூர்த்த நாட்களில் நல்ல விலை கிடைக்கும் பழங் களைப் பிரித்துதான் மார்க்கெட்டுக்கும் அனுப்புவேன்.


முதல் தரப் பழங்களுக்கு நல்ல விலையும், மற்ற பழங்களுக்கு குறைவாகவும் கிடைக்கும். ஒரு கிலோ எலுமிச்சைக்கு ரூ20க்கு குறையாமல் கிடைக்கும். சீசன் சமயங்களில் 100 ரூபாய்க்கும் அதிகமாகவும் விற்பனை யாகும். நான் அதிக பட்சமாக 130 ரூபாய் வரையிலும் விற்பனை செய்துள்ளேன்.



முறையாக பராமரித்து தேவைக்கேற்ப இடு பொருட்களைக் கொடுத்தால் 15 ஆண்டு வரை தொடர் மகசூல் எடுக்கலாம். 2.5 ஏக்கரில் ஆண்டுக்கு 32 ஆயிரத்து 500 கிலோ எலுமிச்சை கிடைக்கிறது. கடந்தாண்டு எலு மிச்சையை விற்றதில் 11.37 லட்ச ரூபாய் வரு மானம் கிடைத்தது.


இடுஇதில் தொழுவுரம், களை எடுப்பு, இடு பொருள், வேலையாள் கூலி, பராமரிப்பு க்காக 3,50 லட்சரூபாய் போக 7.87 லட்ச ரூபாய் இலாபம் பார்த்தேன் என்றார் சண்முக வேலு தொடர்புக்கு: 94862 04359.


- கிராமத்தான்.