கிராமப் பொருளாதாரத்தை கவனிக்காவிட்டால் நகரப் பொருளாதாரம் நகர முடியாது!

களத்து மேட்டுக் கயிற்றுக் கட்டிலில்அைமர்ந்து மிகவும் ஆர்வத்துடன் நாளிதழழை வாசித்துக் கொண்டிருந்த அக்ரியை 'ம்மே' என்ற ஆட்டின் குரல் திரும்பிப் பார்க்க வைத்தது.


சட்டம்தான் கையில் ஒரு ஆட்டை பிடித்த வாறு களத்துக்குள் வந்து கொண்டிருந்தான்.


என்ன சட்டம் ஆட்டோட எங்க போயிட்டு வர்றே? ஆடு கால் நொண்டுற மாதிரி இருக்கே. என்ன சமாச்சாரம் எனக் கேட்டார் அக்ரி.


ஆமா சார், மேய்ச்சலுக்குப் போன இடத்துல என்ன ஆச்சுன்னே தெரியல. கால் ஒடிஞ்சு போச்சு. அதான் நம்ம கோபாலசமுத்திரத்து மாட்டு வைத்தியர் மாரியப்பன் கிட்டே காட்டிட்டு வர்றேன். போறப்ப வண்டியில கொண்டுட்டு போனேன். இங்கிட்டு வர்றப்ப தூக்கிட்டு வர்றேன் - என்ற சட்டத்திடம்.


"அப்படித்தான் சட்டம். நாமதான் மேய்ச்சலுக்கும் போற கால் நடைகளை சரியா கவனிக்கணும் இல்லன்னா இப்படித்தான் ஆடுங்க ஒண்ணோட ஒண்ணு முட்டிகிட்டும், மோதிகிட்டும், அலலது மேய்ச்சல் போற இடத்துல விழுந்தும் கால் ஒடிஞ்சிப் போகும் என்றார் அக்ரி.


ஆமா சார். நான் ரொம்ப பயந்து போ யிட்டேன். அதனால் கருக்கலியே மாட்டு வைத்தியர் வீட்டுக்கு ஆட்ட கொண்டு போயிட் டேன. பாவம் வாயில்லா உசுரு. ராவெல்லாம் (ராத்திரி) வலியில் கத்திகிட்டே இருந்தது என்றான் சட்டம்.


ஆமா, வைத்தியர் என்ன வைத்தியம் பண்ணினாரு, புளியங்கொட்டை, ஆட்டுப் புழுக்கை, முட்டை வெள்ளைக்கரு இதை வச்சுத்தானே பத்துப் போட்டாரு என்று அக்ரி கேட்க...


'அட ஆமா சார், அப்படியே சொல்லீட்டீங்ளே, இருபத்தஞ்சு, புளியங் கொட் டையை எடுத்து, தண்ணில ஊற வச்சாரு, அப்புறம் அதே அளவுக்கு புது ஆட்டுப் புழுக்கையை எடுத்தாரு. இரண்டையும் அரைச்சாரு. அரைலிட்டர் தண்ணியில அதப்போட்டு நல்லா காய்ச்சுனாரு.


பிறகு இளஞ்சூட்டுல, கோழி முட்டையோட வெள்ளைக்கருவையும் அதோட கலந்து ஆட்டோட கால் ஓடிஞ்சு போன இடத்துல பூசனாரு. பிறகு அந்த இடத்தை அப்படியே விடாமல் ரெண்டு தப்பை (சப்போர்ட் கம்பு - பிளாச்சு) வெச்சு கட்டி விட்டாரு. பதினஞ்சு நாள்ல எலும்பு கூடிடும்னு சொல்லயிருக்காரு என்றான் சட்டம்.


ஆமாம், அப்படித்தான். அத ஒரு தடவை நல்லாப் பாத்துகிட்டா, நாமே செஞ்சுடலாம், இது ஒரு இயற்கை வைத்தியம். ஒவ்வொரு தடவையும் மாட்டு வைத்தியரத்தேடி அலைய வேண்டாம் என்றார் அக்ரி.


                                                                 


என்ன ஆச்சரியம் சார் நீங்க சொன்ன தத்தான் மாட்டு வைத்தியரும் சொன்னாரு. சட்டம் நான் ஒருத்தன் தான் வயசானாலும் விட்ட குறை தொட்ட குறைன்னு இந்த கை வைத்தியத்த வாயில்லா ஜீவனுங்களுக்கு பண்ணிட்டிருக்கேன். நான் போயிட்டா எல்லாம் டவுனுக்குத்தான் போகனும்னு இருக்காம இதைக் கத்துக்குங்கன்னு சொன்னாரு என்றான் சட்டம்.


'என்ன முன்னமே வந்துட்டீங்களா' என்று கேட்டுக் கொண்டே வந்து கொண்டிருந்தார் பொறி.


'வாங்க சார் - என்ற சட்டம், என்ன சார் நம்ம அக்ரி சார் கால் நட வைத்தியத்த எல்லாம் அப்படியே விலாவாரியா சொல்றாரே -ன்னு தன் ஆச்சரியத்தை | தன ஆசசாயததை வெளிப்படுத்தினான்.


'ஏன் சொல்ல மாட்டாரு? ஒரு காலத்துல அவங்க தாத்தா, அப்பா எல்லாம் கால்நடை வைத்தியம் செஞ்ச வங்கதான். சின்ன வயசுல இருந்தே அக்ரி சார் கூட இருந்து பாத்து வளர்ந்தவர் தானே என்றார் பொறி.


ம்... அதெல்லாம் சரி. அன்று நகரத்துல தான் வாழ்க்கைன்னு நம்பிப் படிச்சோம். வேலைக்குப் போனோம். வேலையில இருந்து அதைக் காப்பாத்திக்கவும் போராடி வாழ்ந் தோம். ஆனா அது நிலையான வாழ்வு இல்லன்னு தெரிஞ்சும் இருந்துட்டு பணி ஓய்வு கிடைச்சதும் தானே கிராமத்துப் பக்கம் வந்தோம் என்றார் அக்ரி.


உண்மைதான், நீங்களும் நானும் புரிஞ் சகட்ட உண்மை அதுதான். இந்தியப் பொருளாதாரம் உயரணும்னா , கிராமப்பொருளாதாரம் உயர வேண்டும். கிராமப்புறத்தில் வேலைவாய்ப்புகளை ஏற்படுத்துவது பற்றி அரசு சிந்திக்க வேண்டிய நெருக்கடியான காலகட்டம் இது என்றார் பொறி.


அதான் சார், கிராம அளவில் ஊரக வேலை வாய்ப்புத் திட்டம், பாசன வசதி, சாலை சீரமைப்பு, விவசாயச் சந்தைகளை உருவாக்குதல் போன்ற கட்டுமான வேலைகளில் அரசு இறங்க வேண்டும். அப்போது தானே வேலை வாய்ப்புகள் உருவாகும். கிராம வாசிகளை வருமானமுள்ளவர்களாக மாற்றினால் அவர்கள் ஏன் நகரங்களை நோக்கிப் போகப் போகிறார்கள் - என்றார் சட்டம்.


ஊரக வேலைவாய்ப்பு திட்டம் வந்ததுல இருந்து தான் விவசாய வேலைக்கு ஆள் கிடைக்கிறதில்லன்னு ஒரு புகார் இருக்குமே என்றார் பொறி.


அதுக்கு யாரு சார் காரணம்? கூலி வேலைக்கு வர்ற ஆளுங்களா ? சொல்றவங்கதானே காரணம் நியாயமான கூலி தர்றதில்லை. விதைக்கிறதல இருந்து நடவு, களை எடுக்க அறுவடைன்னு எல்லாத்துக்கும் மெஷின் அத்துலயும் தண்ணி முறையாவர்றதில்ல சாகுபடி வேலையும் கொறஞ்சிடுச்சே வந்துடுச்சு வேலைக்குப் போனாத்தான் இன்னக்கி அடுப்பு எரியணும்னு நெலையில இருக்கிறவனுக்கு வேற கதி? என்றான் சட்டம்.


அது சரிதான் சட்டம்! ஆனா சட்டம், திட்டம் எல்லாம் நல்லாதான் இருக்கு. செயல்பாடுதான் சிக்கல்ல இருக்கு. மேல் மட்டம் தொடங்கி கீழ் மட்டம் வரைக்கும் நடக்குற ஊழல்ங்கிற சமாச்சாரம் எப்பதான் ஒழியப் போகுதோ? என்றார் அக்ரி.


என்ன சாருங்க எல்லாம் மும்முரமா விவாதம் பண்ணிட்டிருக்கீங்க போல இருக்கே... என்ற குரலோடு வந்து கொண்டிருந்தாள் கீரை.


வாம்மா வா என அவளை வரவேற்றார் அக்ரி. பொறியும், சட்டமும் சிரித்த முகத்துடன் அவளை ஏறிட்டார்கள்.


என்னக்கா நீ சந்தையில் இருந்து புது சேதியோட வந்து தான் நம்ம களத்து மேட்டுக்கு புது சுறுசுறுப்பு வருது என்றான் சட்டம்.


நாலு இடம் சுத்தி பொழப்பு நடத்துறவளுக்கு ஒரு அஞ்சாறு சேதி கெடக்கிறது வழக்கமா நடக்குற சமாச்சாரந்தானே என்று சொல்லிக் கொண்டே தலையில் இருந்த கூடையை எடுத்து வைத்தவாறே உட்கார்ந்தாள் கீரை.


'இன்னக்கி கிடைச்ச சமாச்சாரம் இது தான். தேர்தல்ல பிஜேபி காரவுங்க, ஆட்சிக்கு வந்தா நாடு முழுவதும் உள்ள சிறு, குறு விவசாயிகளுக்கு 4 மாதங்களுக்கு தலா ரூ.2,000 மானியம் வழங்கும். திட்டம்னு சொன்னாங்களாமே. அது சரியா நடக்கலைன்னு ஒரே பேச்சு என்றாள் கீரை.


ஆமாம், மத்திய அரசு நிர்ணயித்த விதிகளின் அடிப்படையில் முதல் 2 தவணை நிதி பெற்ற விவசாயிகளக்கு 3-ஆவது தவணை நிதிமறுக்கப்பட்டுள்ளது. பெரிய பிரச்சினை ஆகி உள்ளது என்றார். அக்ரி ஒரு திருத்தம், பிஜேபி இரண்டாம் முறை ஆட்சிக்கு வருவதற்கு முன்னரே அது அறிவித்த திட்டம் இது என்றார். பொறி.


“நானும் படிச்சேன் சார், என்னங்க சார். அநியாயம் இது. விவசாயிகளுக்கு முதல் தவணை நிதி உதவி வழங்க ரூ.20 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்ததாம். அது 10 கோடி பேருக்கு நிதியுதவியாக வழங்கப்பட்டிருக்க வேண்டுமாம். ஆனால் 6.71 கோடி பேருக்குதானே வழங்கி இருக்காங்களாம்" என்றான் சட்டம்.


அது மட்டுமா, இரண்டாம் தவணையாக ரூ.75 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டதிலும் 12.30 கோடி பேருக்கு சேர வேண்டிய நிதியுதவி அதில் மூணுல ஒரு பங்கு பேருக்குக் கூட கொடுக்கப்படலையம் என்றார் அக்ரி.


அதுக்கு என்ன காரணம் சொல்றாங்களாம் எனக் கேட்ட கீரைக்கார அக்காவுக்குப் பதில் சொன்னான் சட்டம்.


ஆமாக்கா, படிக்கத் தெரியாத ஏழை பாழைங்களுக்கு என்ன தெரியும்? ஆதார் அட்டையில் அது தப்பு, இந்த சான்றிதழில் இந்த தப்புன்னு சொல்றாங்களாம். அதைக் காரணம் காட்டி நிறுத்தறாங்களாம் என்றான் எரிச்சலுடன்.


                                                                              - களத்து மேட்டு கந்தசாமி.