தமிழக வளங்களை அழிக்க வரிசைகட்டும் அரசு திட்டங்கள்! கடலோர வளங்களை அழிக்க சாகர் மாலா, கால்நடைகளை அழிக்க புதிய சட்டம்!

த ட்டிலில் அமர்ந்து அன்றைய மாலை நாளிதழ் ஒன்றைப் படித்துக் கொண்டி ருந்த அக்ரி ஏதோ பேச்சுக்குரல் கேட்டு தலை நிமிர்ந்து பார்த்தபோது, சட்டமும் அவனுடன் யாரோ ஒரு இளை ஞரும் களத்து மேட்டில் ஏறிக் கொண்டிரு ப்பதைப் பார்த்தார். அவரை அருகில் நெருங்கிய சட்டம், வணக்கம் சார். இவரு என் வீட்டுக்காரியோட அண்ணன். வேதாரண்யத்துல் மீனவர் சங்க செயலாளரா இருக்கார். உங்களப் பாக்க இவரை யும் கேக்காமயே அழைச்சிட்டு வந்திட்டேன் என்றான். அதுக்கென்னப்பா, என்ற அக்ரி வாங்க தம்பி, உட்காருங்க என்று புதிய வரைப் பார்த்து சொன்னார். பிறகு சட்டத்தைப் பார்த்து தம்பி பேரு என்னா எனக் கேட்க, தமிழரசன் என்ற சட்டம் உட்காருங்க மச்சான் என்றான். நானும் வந்துட்டேன் என்ற குரலோடு வந்து கொண்டிருந்தார் பொறி. எல்லோரும் அறிமுகம் செய்து கொண்டதும், சட்டம் கேட்டான். “என்ன சார், பேப்பர்ல இன்னக்கி என்ன சேதி”. இன்னக்கி வந்திருக்கிற தம்பி தமிழரசன் கிட்டே பேச வேண்டிய பரபரப்பான செய்து அது என்றார். அக்ரி, பிறகு தமிழரசன் கிட்டே கேட்டார். இன்னிக்கி பேப்பர்ல வந்திருக்கிற செய்தியைப் படிக்கிறேன். அதைக் கேட்டுட்டு உங்களோட கருத்தையும் எதிர் பார்க்கிறோம் என்றார். நிச்சயமா, சேதியைச் சொல்லுங்க எனக்குத் தெரிஞ்சதைச் சொல்றேன் என்ற தமிழரசன் நிமிர்ந்து அமர்ந்த கொள்ள, சேதியைப் படித்தார் அக்ரி. 'விழி ஞ்சம் சர்வ தேச துறை முகத் திட்டத்திற்கு 36 லட்சம் டன் பாறைகள் கடல் வழியாக எடுத்துச் செல்ல திட்டம் குமரிமலை வளம் ஒட்டு மொத்தமாக அழியும் அபாயம் கருத்துக் கேட்பு திட்டம் நடத்தவே பொது மக்கள் எதிர்ப்பு' -என படித்து முடித்ததும், உடனே தனது குரலை உயர்த்தினான் சட்டம். அ வ னுடைய குரலை தன்னுடைய கையசைவால் சற்றே தடை செய்த பொறி. தமிழரசனின் முகத்தை ஏறிட்டுப் பார்த்தார். உண்மை சார். மத்திய அரசின் வருமான வெறித் திட்டங்களில் இதுவும் ஒன்று. மண்ணை அழிக்க ஹைட்ரோ கார்பன், மலையை அழிக்க நியூட்ரினோ போன்ற இத்தகையத் திட்டங்கள், கடல் வளத்தை அழிக்க சாகர்மாலா, மக்களின் இயல்பு வாழ்வை அழிக்க சாலைத் திட்டங்களான பாரத்மாலா போன்ற திட்டங்கள் என முகத்தில் வெறுப்பு கொந்தளிக்க பேசினார் தமிழரசன் சட்டம் சிவந்த கண்களில் தீயெழ கேட்டுக் கொண்டிருந்தான் தமிழரசன் தொடர்ந்தார். இந்தியக் கடலோரங்களில் பல் துறைமுகம் அமைத்து, நம் நாட்டின் வளங்களை நம் அரசே சுரண்டி வெளிநாட்டிற்கு விற்று, நம் நாட்டை வளர்ச்சி அடையும் திட்டம் தான் இந்த சாகர்மாலா திட்டம், வேறென்ன சொல்ல...? இந்தத் திட்டத்தைப் பற்றி நீங்கள் விரும்பும் எந்த அரசும், எந்த கட்சியும் வாய் திறக்காது-என்றார். நாம் முன்ன பேசுனமே, அலையாத்திக் காடுகள் அழிவதற்கு கடலோர மேம்பாட்டுத் திட்டங்கள் என்ற பெயரில் அரசு மேற் கொள்ளும் முயற்சிகள் பற்றி.... அதுவும் இந்த சாகர்மாலா என்கிற திட்டந்தானே எனக் கேட்க. 'ஆமாம், கடலோரம் வாழும் மீனவர்களின் வாழ்வாதாரம் தொடங்கி, கடல் வாழ் உயிரினங்கள் வரை எல்லாம் அழிய வழி காட்டப்போகும் திட்டம் இது தான் என் மிகவம் வெறுப்புடன் சொன்னார் பொறி. நன்றாகச் சொன்னீர்கள் அய்யா, இந்தியாவின் மேற்கு மற்றும் கிழக்கு கடற்கரைப் பகுதிகளில் சாகர் மாலா, பாரத் மாலா ஆகிய இரண்டு திட்டங்களின் மூலம் தனியார் துறைமுகங்கள், சாக்குப் பெட்டக முனையங்கள் (Container Terminals), அனல் மின் நிலையங்கள்.... போன்றவற்றைக் கொண்டு வருவது அரசின் திட்டம். இவை எல்லாம் ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் திட்டங்கள். இவைபோக, கடற் கரையோரப் பகுதிகளை, குறிப்பாக குமரி மற்றும் கடலோரப் பகுதிகளை சுற்றுலா வுக்காகத் திறந்து விட வேண்டும் என்பது அரசின் திட்டம் என்றார் தமிழரசன். சுருக்கமாவும் தெளிவாகவும் பல விவரங் களைத் தெரிய வைத்தீர்கள். விவசாயி, மீன வர், நடுத்தர மக்களின் மீதான வாழ்வாதாரத் தாக்குதல்கள் இவை என்பதை நன்றாகப் புரிந்து கொள்ள முடிகிறது என்றார் அக்ரி. | 'கொஞ்சம் லேட் பண்ணிட்டேன்' என்ற குரல் கேட்க எல்லோரும் திரும்பி பார் த்தார்கள். கீரை வந்து கொண்டிருப்பது தெரிய, வாம்மா வாக்கா, என்ற குரல்கள் ஒரே சமயத்தில் எழுந்தன. வேகமாக வந்த கீரையை 'வாங்கக்கா' என்றார் தமிழரசன். பின் மற்றவர்களைப் பார்த்து, அக்காவை எனக்கு முன்பே தெரியும் என்றார். என்னம்மா, சந்தையில் என்ன சமாச்சாரம் என கீரையைப் பார்த்துக் கேட்டார் அக்ரி. “ என்ன நாட்டு மாடுகளை அழிக்கி றதுக்குன்னு ஏதோ ஒரு நய வஞ்ச கத் திட்டத் ைத அ ர ச ா ங் க ம் கொண்டு வந்திருக்காமே! அதப்பத்தித்தான் பேச்சு. நானும் விவரம் கேட்டேன். ரத்தம் கொதிச்சுப் போச்சு-என்றாள் கீரை. ஆமாக்கா, அது ஒரு கறுப்புச் சட்டம். ஜல்லிக்கட்டை வைத்து நாட்டின க் காளைகளை அழிக்க பீட்டா என்கிற புரோக்கர் அமைப்பு மூலம் முயற்சி நடந்தது. அ ந்த அமெரிக்க நிறுவனத்தின் முயற்சி எல்லாமே தோற்றுப் போய் விட்டதல்லவா! நாட்டு மாடுகளை அழிக்கிறதுக்குன்னு ஏதோ ஒரு நயவஞ்சகத் திட்டத்தை அரசாங்கம் கொண்டு வந்திருக்காமே! அதப்பத்தித்தான் பேச்சு. நானும் விவரம் கேட்டேன். ரத்தம் கொதிச்சுப் போச்சு அவர்களின் அடுத்த முயற்சிதான் தமிழக அரசு மூலம் அமல்படுத்த உள்ள இந்தத் திட்டம். இதன் படி இனி நாட்டு மாடுகளுக்கு நம் நாட்டு காளைகள் மூலம் சினைக்கு சேர செய்யக் கூடாது. இனி வெளி நாடுகளில் பெறப்படும் சினை ஊசி மூலமே அதைச் செய்ய வேண்டும் என்ற சட்டத்தை தமிழக அரசு பிறப்பிக்க உள்ளதாம்-என்றான் சட்டம் கொதிப்புடன். அடடா, நமது பாரம்பரிய காளைகளின் சின் மரபணுவில் மாற்றம் ஏற்பட்டு, நாளடைவில் நாட்டு மாட்டு இனமே ஒழிந்து விடுமே. இது நிச்சய மாக நய வஞ்சகத்திட்டந்தான் என்றான் அக்ரி. இதன் பின்னணியில் பெரிய வஞ்சக வலை திட்டமே உள்ளது. பல ஆயிரம் ஆண்டுகளாக நாம் பாதுகாத்து வரும் மாட்டு இனங்களை மக்களிடம் பிரித்து எடுக்கும் முயற்சிதான் இது என்றார் பொறி. அது மட்டுமல்ல. இதையெல்லாம் செயல் பாட்டில் கொண்டு வர அரசு அமைப்பின் கீழ் பதிவு, சோதனை அதிகாரம், ச ட் ட த் தி ரு த் த ம் எ ன் ெற ல் ல ா ம் உத்தேசித்துள்ளது தமிழக அரசு என்றான் சட்டம். நாட்டுப் பொலி காளை கள் வளர்ப்புக்கான அனுமதி என்ற பெயரில் அதை அழிக்கும் சட்ட விதிகளும் கொண்டு வரப்படுமாம் என்றாள் கீரை. இதைப் பற்றி பெரிய அளவில் சட்டம். இது ஒரு கறுப்புச் சட்டம். பெருத்த அளவிலான எதிர்ப்பை மக்கள் காட்ட வேண்டும் என்றார் தமிழரசன். இதை தலையசைத்து ஏற்றுக் கொண்ட சட்டம் ஒரு இலட்சிய வேகத்துடன் இப்படிச் சொன்னான். "விவசாயத்தால் வாழ்பவர்கள் நாம். அதற்கான அடிப்படை ஆதாரங்களை இழந்து விட்டு வா ழ வே ண் டு ம ா ? விவசாயிக்காக துடிக்காமல் வேறு எதற்கு உயிர் உடலோடு”. - களத்து மேட்டு கந்தசாமி.