நம்மாழ்வாரின் வானகம் உருவாக நானும் ஒரு காரணம்! முத்தூர் பாமரதீபம் பார்த்தீபனுடன் ஓர் நேர்காணல்!

டல் அளப்பரிய ஆற்றல் பெற்றது. உ ட ம் பு க் கு எ ன் ன தேவையோ, எந்த சக்தி குறைகிறதோ அதனைக் கேட்டுப் பெற்று தனக்குத் தானே நிவர்த்தி செய் து கொள் ளு ம் திறன் பெற்றது. இயக்க சக்தி குறைந்து போகும் பட்சத்தில் பசி என்கிற உணர்வு மிகுந்து உண வைக் கேட்டு பசியை அடக்கிக் கொள் கிறது. தண்ணீர் இல்லாது உடல் கிடக்குமானால் தண்ணீரைக் கேட்டுப் பெற்று தன்னிறைவு அடைகிறது. அங்க அவையங்கள் சற்று சளித்துப் போனால் ஓய்வு தேவையென் பதனை அறிந்து தூக்கத்தினைப் பெற்று அதனை நிறைவேற்றுகிறது. உடல் பசி மூல மாக தாகம் மூலமாக, தூக்கம் மூலமாக இன்னும் பல்வேறு வழிகளில் உடலின் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளும் அற்புத ஞானம் மிக்கது நமது உடல் என்று நம்மாழ்வார் அடிக்கடி சொல்வார். இயற்கை மருத்துவம் என்பது உயிர் வாழ்க்கை பற்றிய அறிவியல். உடல் நலமாக இருக்கும் பொழுதும், நோய் வாய்ப்படும் போதும் மேற்கொள்ளப்படும். பராமரிப்பு முறைக்குப் பெயர்தான் இயற்கை மருத்துவம் என் பார் நம்மாழ்வார். சீரான உணவுஉண் ண ர் ந ல த்தது நோன்பு ஓய் வு இளைப்பாறுதல், பயிற்சி, பொழுதுபோக்குமூச்சுப்பயிற்சி சூரியக்குளியல் நீர் சிகிச்சை போன்றவை நாம் சுகாதாரத்தினைப் பேண செய்ய வேண்டிய பழக்கவழக்கங்கள் என்றும் கூறுவார். அகிம்சை என்பதே இயற்கை மருத்துவத்தின் அடிப்படைக் கொள்கை. இயற்கையோடு இணைந்த வாழ்க்கை எளிமையானது. அதனை ஏற்றுக் கொண்டால் அதுவே வளமை - ய ா ன து எ ன் கி ற ா ர் நம்மாழ்வாரின் நண்பர் முத்தூர் பாமரதீபம் நா.பார்த்தீ பன். 1996 ல் கே ா ைவ யி லே த ான் நம்மாழ்வாருடன் முதல் சந்திப்பு ந ட ந் த து எ ன் று நி ைன வு கூர்கிறார். இ ய ற் ைக ம ரு த் து வ ர் சுப்பிரமணியம் தான் என்னை அவருக்கு அறிமுகம் செய்து ைவ த் த ா ர் எ ன் று ம் சுப்பிரமணியத்தை நன்றி பாராட்டுகிறார். வசீகர மான அவரது பேச்சுக்கு நான் அடிமை என்றே கூற வேண்டும் என்கிறார். இடையிடையே பல்வேறு நிகழ்வுகளில் நாங்கள் சந்தித்து உரையாடி இருக்கிறோம் என்றாலும் 1998ல் கொடுமுடியில் டாக்டர் நடராஜன் அவர்களுடன் சந்தித்தது மிகவும் மகிழ்ச்சிகரமான நிகழ்வென்று நம்மாழ்வார் புகழ் பாடுகிறார் பார்த்தீபன். சமுதாயம் நாகரீகத்தின் போதையிலே தள்ளாடுகிறது. அதனால் நாம் செல்ல வேண்டும் நம்மாழ்வாரின் பாதையிலே என்று கவியும் பாடுகிறார். வனத்தின் மரங்கள் அடர்ந்து கிடந்தது கருமேகங்கள் அந்தக் குளிர் காற்றை ஈர்த்தது. மழை பொழிந்தது. அதனால் ஆறுகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது குறுக்கே அணை கட்டினான். அதன் மூலம் வயலில் தண்ணீர் கட்டி உழவன் உழவாண் மையை சிறப்புறச் செய்தான். இன்று மரங்கள் வெட்டப்பட்டன. குளிர்ந்த காற்றும் இல்லை கருமேகங்களும் சூழவில்லை மழையும் இல்லை. வறட்சிதான் மிஞ்சுகிறது என்று வேதனைப்பட்டார் நம்மாழ்வார் மாதிரியே பார்த்தீபனும். வே தாந்த மகரிஷி மகான் கூறும் கூற்றினையும் நினைவு கொள் கிறார். சித்துக்கள் என்றே உந்தன் சிந்தயை மயக்கி வித்தைகள் பல காட்டும் மனிதா. நித்தம் நித்தம் எழும் உனது உடல் பசியினை நிச்சயமாக அது போக்காது. உத்தமனால் பயிரிடுவோர் உழுது அளிக்கும் உணவு எனும் அ முது தானே உன து பசியை அடக்கும். நம்மாழ்வாரின் வழிகாட்டுதலின் படி அவரது 7 ஏக்கர் நிலத்தில் குச்சிக்கிழங்கு, நிலக்கடலை, தென்னை இவற்றோடு காய்கறித் தோட்டங்கள் அமைத்து இயற்கை விவசாயத்திலே அசத்துகிறார் பார்த்தீபன். பொறியியல் பட்டதாரியான அ வர து ம க னு ம் ப டி த் து வி ட் டு இ ய ற் ைக விவசாயத்தில் அப்பாவிற்கு உறுதுணையாக பணிபுரிகிறார்.


பவானிசாகரிலிருந்து கொடுமுடி நோக்கி ைட ப ய ண ம் ேம ற் ெக ா ண் ட நம் மாழ்வாரோடு பல நாட்கள் அ ந்த நடைபயணத்தில் கலந்து கொண்டு சிறப்பு சேர்த்திருக்கிறார். அந்த நடைபயணம் மக்களை த் தி ரட்ட வு ம் ம க் க ளே ாடு கருத்துக்களை ப் பரிமாறவும் கிடைத்த அருமையான வாய்ப்பு என்கிறார் அந்த நடைபயணம் பற்றி.. வானகம் உருவாக நானும் ஒரு காரணம் என்று பெருமை கொள்கிறார் பார்த்தீபன். எளிய வாழ்க்கை உயரிய எண் ண ம், சொல்லிய வண்ணம் செயலாற்றுதல் அதீத ஞாபகசக்தி நம் மாழ்வாரின் பலங்கள் என்கிறார். இந்தியாவில் வாழும் இந்தியர்கள் அனைவரும் உணவுக்கு செலவழிப்பதை விட மருந்துக்கும், மாத்திரைக்கும், மருத்துவமனைக்கும் அதிகமாக | செலவழிக்கிறோம். நம்மாழ்வாரோடு வெப்படை, கோவை, ஈரோடு, குண்டல்பேட் இன்னும் பல்வேறு ஊர்களுக்கு அவரோடு பயணித்ததையும் உன் கருத்துக்களைப் பேசு என்று ஊக்கப்படுத்தியதையும் நன்றி யோடு நினைவு கூறுகிறார் பார்த்திபன். அவரோடு ஒரு ஆண்டு கூடவே இருந் தேன். விவசாயம் என்றாலே அது இயற்கை விவசாயம் தான் என் பார் கூட இருந்த காரணத்தால் அவரது விவசாயத் தொழில் நுட்பங்கள் எனக்கு அத்துப்படியானது . வ ரு க் கென்று எ தி ரி க ள் யாரு மே கிடையாது. யாரையும் அவர் எதிரியாகவே பார்க்கவில்லை எல்லோரும் நண்பர்கள் தான் என்பார். நாம் முறம் மாதிரி இருக்க வேண்டும்ஜல்லடையாக இருக்கக் கூடாது என்பார்ஜல்லடையில் சளிக்கும் போது நல்லவைகள் மட்டும் கீழே விழும். குப்பைகள் மட்டுமே ஜல்லடையில் தங்கும். முறம் இருக்கிறதே அது புடைக்கும் போதே குப்பைகளை வெளியேற்றி விட்டு நல்லவைகளை மட்டும் தன்னகத்தே வைத்துக் கொள்ளும் என்று உதாரணம் சொல்லி ஆணி அடித்தார் போல மண்டையில் ஏத்துவார். அதே போல நாம் பூக்கள் போல் வாழ வேண்டும் என்பார் நம்மாழ்வார். தேனீக்கள், பூச்சிகள் மட்டுமே பூக்களை நாடி வரும். சாக்கடை மாதிரி நாம் வாழக்கூடாது என் பார். சாக்கடையில் புழுக்களும், ஈக்களும், கொசுக்களுமே வந்து சேரும் இனப்பெருக்கம் செய்யும். நாம் மலராக இருந்து மணக்க வேண்டும். பிறர்க்கு உதவிகரமாய் இருந்திட வேண்டும் என்பார் நம் மாழ்வார் என்று அவரின் புகழ் பாடுகிறார். விதையாக நாம் இருக்க வேண்டும். மண்ணில் விழுந்து முளைத்தால் அது மரம். இல்லையேல் மண்ணுக்காகும் உரம் என்ற கருத்து எனக்கு மிகவும் பிடித்தது என்கிறார். இயற்கை மருத்துவத்தில் உடலையும் மனதையும் சுத்தமாக வைத்துக் கொள்ள முடிகிறது என்பார். சிறுதானிய உணவு களையும் பச்சைக் காய்கறி பழங்களையும் விரும்பி உண்பார். உடற்பயிற்சிகளையும் யோகவும் செய்து உடலை நன்றாக வைத்துக் கொள்வார். உலகத்தில் இரண்டே இரண்டு நீர் தான் கலப்படம் இல்லாதது என்பார் நம்மாழ்வார் ஒன்று நமது வாயில் சுரக்கும் உமிழ் நீர் அடுத்து கண்ணில் சுரக்கும் கண்ணீர் இரண்டும் நமக்கு நன்மை செய்பவையே என்பார் நம்மாழ்வார். இராசயன உரங்கள் கொட்டி நிலம் விஷமானது. மண் மடலானது. ஆறுகளும், ஏரிகளும், ஆலைகளின் கழிவுகள் கலக்கும் குப்பைத் தொட்டியானது . சிறுதான் ய உண வு களை யும் மறந்து போனோம். பொருத்தம் இல்லாத தொழில் நுட்பங்களை யெல்லாம் இறக்குமதி செய்து நமது உணவும் நிலத்தடி நீரும் நஞ்சாகிப் போனது. இந்தியாவில் வாழும் இந்தியர்கள் அனைவரும் உணவுக்குச் செலவழிப்பதனை விட மருந்துக்கும் மாத்திரைக்கும் மருத்துவ மனைக்கும் அதிகமாக செலவழிக்கிறோம் என்பார் நம்மாழ்வார் என்று வருத்தப் படுகிறார் பார்த்தீபன் நம்மாழ்வாரோடு வாழ்ந்த காலம் வசந்த காலம் என்றும் பரவசப்படுகிறார். நம்மாழ்வார் பற்றி இவ்வளவு நேரம் உரையாடியதற்காக "விவசாயி" மாத இதழ் சார்பில் நன்றி தெரிவித்து விடைபெற்றோம். தொடர்புக்கு: பாமரதீபம் நா.பார்த்தீபன் ஈரோடு அலைபேசி : 9443305011 டாக்டர் கே.வி.கோவிந்தராஜ் PhD அலைபேசி : 98427 04504