வேளாண் தொழிலில் ஐக்கெளின்ங்க ளிப்பாடு

எங்கெல்லாம் விவசாயம் நடைபெறு கிறதோ அங்கெல்லாம் பூச்சிகளின் பங்களிப்பு விவசாய உற்பத்தி அதிக அளவில் லாபம் பெற உதவியாக இருக்கிறது. பூச்சிகளின் செயல்பாடு இல்லாவிடில் மகரந்தச் சேர்க்கை நடைபெறாது. தீமை செய்யும் பூச்சிகளை கட்டுப்படுத்துதல், மண்ணில் மக்கு உருவாகுதல் போன்ற அரிய பணிகளை பூச்சினங்கள் செய்கின்றன. பூச்சிகளில் நன்மை செய்யும் பூச்சிகள் அதிக அளவில் இருந்தால் பயிர் பாதுகாப்பு இயற்கையாகவே நடந்து விடும். எனவே நன்மை செய்யும் பூச்சிகளை கவர வயலில் சூரியகாந்தி, செண்டுமல்லி, அருவாள்மனை பூண்டு போன்ற செடிகளை வளர்க்கலாம். தேனீக்கள் , கு ள வி கள், தட்டான் , பட்டாம்பூச்சி, பெருமாள்பூச்சி (or) கும்பிடு பூச்சி (Mandritis). பொறி வண்டுகள் உள்ள ன. அவற்றின் செயல்பாடுகளை, பங்களிப்பை விரிவாகக் காண்போம். தேனீக்கள்: விவசாயிகளின் நண்பன் மட்டுமல்ல உலகவாழ் விவசாயிகளுக்கு நண்பனாகும்ஏனெனில் தேனீக்கள் இல்லை என்றால் உணவு உற்பத்தி நடக்காது. உலகம் அழிந்து விடும் என்று அறிவியல் அறிஞர்கள் கூறியுள்ளார்கள். தமிழகத்தில் மலைத்தேனீ, கொம்புத் தேனீ, அடுக்குத்தேனீ மற்றும் கொசுத் தேனீக்கள் போன்ற ரகங்கள் உள்ளன. கொம்புத் தேனீ மற்றும் அடுக்குத் தேனீக்கள் பண்ணையில் வளர்க்கக் கூடியவை. இவை அயல் மகரந்தச் சேர்க்கைக்கு பெரிதும் உதவுகின்றன. தென்னந் தோப்புகளில் தேனீ வளர்ப்புகள் மூலம் குரும்பை உதிர்வதைத் தடுக்க முடியும். சூரியகாந்தி, பூந்தோட்டங்கள், தோப்புகளில் தேன் பெட்டி வைத்து வளர்த்து அதிக வருமானம் பெறலாம். தேனீ வளர்ப்பு என்பது ஒரு தொழிலாக விவசாயத் தொழிலுக்கு பக்க தொழிலாக உள்ளது. ஒரு பாலின மலர்கள் உள்ள தாவரங்களில் பூச்சிகள் இல்லை என்றால் மகரந்தச் சேர்க்கை நடைபெறுதலும், காய் பிடித்தலும் தடைபடும். எடுத்துக்காட்டாக, கொடி காய்கறிகள், பந்தல் காய்கறிகளில் அயல் மகரந்த சேர்க்கை நடைபெற பூச்சிகள் மிக அவசியமாகும். குளவிகள்: சிலவகை குளவிகள் தீமை செய்யும் பூச்சி களை அழிப்பதால் ஒட்டுண்ணிகளாகவும், இரையுண்ணிகளாகவும் செயல்படுகின்றன. 2மி.மீ நீளத்தில் இருந்து 2 அங்குலம் நீளமுள்ள பல்வேறு வகையான குளவிகள் உள்ளன. இவை பயிர்களைத் தாக்கும் புழுக்களின் மீது முட்டையிடுகின்றன. முட்டையில் இருந்து வெளிவரும் இளம் லார்வாக்களுக்கு புழுதான் உணவு. மேலும் சிறிய ரக குளவிகள் தீமை செய்யும் பூச்சிகளின் முட்டைகளைத் துளைத்து அதில் முட்டையிட்டு ஒரு ஒட்டுண்ணி யாக செயல்படுகிறது. (எ.கா) டிரைகோகிராமா குளவி. கரும்பைத் தாக்கும் இடைக்கணு புழுவின் முட்டையில் இவை முட்டையிட்டு அழிக்கக் கூடியவை. எனவே இந்த குளவிகள் முட்டையிட்டு அழிக்கக்கூடிய வகை. எனவே இந்த குளவிகள் பெருமளவில் உற்பத்தி செய்யப்பட்டு கரும்பு விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது. (எ.கா) லூக்மோனிடே குளவி, அபிலினிட் குளவி, செலானன் குளவி. தட்டான் அல்லது தும்பி: இதன் எடையில் 10% எடையிலுள்ள பூச்சிகளை தினமும் உண்கிறது. நெல் வயல்களில் இயல்பாகவே காணப்படும். தட்டான் பறந்தால் மழை வரும் என்ற பழமொழியும் உண்டு. தட்டான் வாழ்க்கைச் சுழற்சியில் முட்டை பருவம் மற்றும் லார்வா பருவம் தண்ணீரிலேயே நடைபெறுவதால் முழுமையான தண்ணீர் அவசியம் தேவை. லார்வா பருவத்தில், தண்ணீரில் உள்ள கொசுவின் முட்டை போன்றவற்றை உண் கிறது . வளர்ந்த தட்டான் கள் இரை விழுங்கியாக செயல்பட்டு தீமை செய்யும் பூச்சிகளை பிடித்து உண்கிறது. எனவே தட்டான் வளர்ச்சி அதிகப்படுத்திட எல்லா விவசாயிகளும் பண்ணைக் குட்டை மைத்திட வேண்டும். குளத்தில் நீர் தாவரங்களும், காய்ந்த குச்சிகளை நட்டு வைப்பதன் மூலம் தும்பிகள் குளத்தை நோக்கி வந்து இனப்பெருக்கம் செய்யும். பட்டாம்பூச்சி: இவை பெரும்பாலனவை புழுப்பருவத்தில் பயிருக்கு சேதத்தை ஏற்படுத்து வ தாக ரு க் கி ன் ற ன . எ னி னு ம் , வ ள ர் ந்த பட்டாம்பூச்சிகள் மகரந்த சேர்க்கையில் ஒரு பங்கு வகிக்கின்றன. குறிப்பிட்ட பயிரை ஒரு குறிப்பிட்ட பட்டாம்பூச்சி மட்டுமே தாக்கும் என் பதால் பட்டாம்பூச்சிகள் அனைத்து தீமை செய்யும் பூச்சிகள் இல்லை. பெருமாள் பூச்சி (அல்லது) கும்பிடு பூச்சி: எல்லா வயல்களிலும் இது காணப்படும். இரை விழுங்கியாக செயல்படுகிறது. எந்த பூச்சி கிடைத்தாலும் உண்ணக்கூடியது . கூர்மையான ரம் பம் போன்ற இதன் கால்களில் சிக்கிய எந்த பூச்சியையும் தப்ப விடுவதில்லை .சிலந்திகள்: இவை பூச்சியினத்தைச் சார்ந்தவை இல்லை என்றாலும், இவைகளும் விவசா யிகளுக்கு நண்பனாக இருக்கிறது. வலையில் சிக்கும் எந்த வகையான பூச்சிகளையும் உண்ணக்கூடியது. (எ.கா) தாவும் சிலந்தி, சிலந்தி, ஓநாய், சிலந்தி, குள்ள சிலந்தி. மேற்கண்ட பூச்சிகளைத் தவிர எண்ணற்ற நன்மை செய்யும் பூச்சிகள் உள்ளது. பூச்சிக் கொல்லி மருந்துகளை பயன்படுத்துவதால் தற்போது அழிந்து வருகின்றன. (எ.கா) அரகானிடே டிரைபிலோ ரோமஸ் சிலந்தி. இயற்கை விவசாயம் செய்வதன் மூலம் பூச்சிகள் காப்பாற்றப்படுவதோடு, உயிரின பன்மயமும் பூச்சிகள் காப்பாற்ற ப்படுவதோடு உயிரின பன்மயமும் நமது வயலில் நிலைக்கும். பூச்சிக்கொல்லி தவிர்த்து பொருளாதார சேத நிலை அறிந்து அளவான முறையில் பயன்படுத்தி பயிர் பாதுகாப்பு செய்திட வேண்டும். -அக்ரி.எஸ்.சந்திரசேகரன், B.Sc(Agri). M.B.A, (AB). வேளாண் ஆலோசகர், அருப்புக்கோட்டை. செல்: 63746 95399.