முத்தான லாபம் தரும் முருங்கை சாகுபடி!

மோ ரிங்க ஒலிபெரா என்னும் தாவர வியல் பெயருடைய முருங்கை ஆங்கிலத்தில் டிரம்ஸ்டிக் (Drum stick) என்று அழைக்கப்படுகிறது. தமிழ்ப் பெயரும், ஆங்கிலப்பெயரும் இரண்டுமே காரணப் பெயர்கள் தான். முருங்கை மரத்தின் கிளைகள் மிகவும் எளிதில் முறிந்துவிடும் தன்மை உடையது என்பதால் தமிழில் முருங்கை மரமானது. ஆங்கிலத்தில் ட்ரம் என்னும் தாள வாத்தியம் வாசிக்கின்ற குச்சி போன்ற தோற்றத்தை உடையதால் ஆங்கிலத்தில் டிரம்ஸ்டிக் (Drum stick) எ னும் பெயர் இந்த காய்க்கு சூட்டப்பட்டது. உறைபனி, கொட்டும்பனியை அறவே விரும்பாத முங்கை ஒரு வெப்ப மண்டலப் பயிர். லேசான அமிலத் தன்மையுள்ள தண்ணீர் தேங்காத வடிகால் வசதியுள்ள நல்ல மண் வளம் உள்ள பகுதியில் செழித்து வளரும்.


மரமுருங்கை - இது நீண்ட கால பயிர். இதனை இனப்பெருக்கம் செய்யலாம். இது பல்லாண்டுகால நிரந்தர பயிர். சுமார் 1 1/2 அடி சுற்றளவுடன், 40 அடி உயரத்துடன் வளரக்கூடிய மரவகை. செடி முருங்கை - இது விதை மூலம் இனபெருக்கம் செய்யப்படுவது. இது குருகிய கால பயிர். 3 அல்லது 4 காய்ப்புகளுக்குப்பின் காய்க்கும் திறன் குறைவதால் இதனை வெட்டி அப்புறப்படுத்தி விட்டு வேறு முறை நடவு செய்ய வேண்டும். இதனை செடி முருங்கை என பரவலாக அழைக்கின்றனர். செடி முருங்கையில், பி. கே. எ ம் -1, .கே.எம்-2, யாழ்பாண முருங்கை துர்கா, .கே.வி.கே, கே.எம்.1, சாகவச்சேரி என பல்வேறு வகை இருந்த போதிலும் பி.கே.எம்-1 னு ம் இர க ம் தான் சக்கை போடு போடுகின்றது. தரமான நல்ல முளைப்புத்திறன் உள்ள பொறுக்கு விதையாக இருப்பின் ஏக்கருக்கு 500கிராம் விதை போதுமானது. மூன்றாம் நாள் உயிர் தண்ணீர் பாய்ச்ச வேண்டும். ஊடுபயிராக வெங்காயம், தட்டைபயறு, கொத்தமல்லி, முள்ளங்கி சாகுபடி செய்யலாம். செடி முருங்கையை 4 அடி உயரம் வந்தவுடன் அ தன் நுனியைக் கிள்ளி செங்குத்து வளர்ச்சியை அதிகப்படுத்த வேண்டும். விதை மூலம் பரவும் நோய்கள் கட்டுப்படுத்த 1 கிலோ விதைக்கு 100 கிராம் சூடோமோனாஸ், புளுரசன்ஸ் உயிர் மருந்தை கலந்து விதை நேர்த்தி செய்ய வேண்டும். நடவு குழியில் 15 கிலோ தொழு உரம், அசோஸ்பைரில்லாம் பாஸ்போடேக்டிரியா கலந்த கலவையை மண்புழு உரம் இட்டு நட வேண்டும். “முருங்கை தின்னா முன்னூறு நோய் வராது” என்பது பழமொழி. முருங்கை தொடர்ந்து உணவில் பயன்படுத்துவோருக்கு 300 வகை வியாதிகள் அண்டவே அண்டாதாம். இதனை தவிர முருங்கை மர பிசின், முருங்கை மரத்திலிருந்து எடுக்கப்படும் பென் ஆயில் அழகுசாதன பொருட்களில் பயன்படுத்தப் படுகின்றது. முருங்கைக்காயை அறுவடை செய்வதில் எப்போதும் கவனம் தேவை. முற்றிய முருங்கைக்காயும் விலை போகாது. பிஞ்சு முருங்கைக்காயும் பயன்தராது. முருங்கைக்காய் தேவை என்ன எதிர்பார்க்கிறார்களோ, அ ைத ப் ேப ா ல க ா ைய ப் ப றி த் து சந்தைப்படுத்துவதே திட்டமிட்ட செயலாகும். காய்கறி சாகுபடியிலேயே முக்கியமானது மகசூலும், விற்பனையும். இதில் கவனம் செலுத்தி வந்தால் முத்தான லாபத்தை முருங்கைக்காயில் பெறலாம்.